தமிழில் ஹாரர் படங்கள் மிகவும் குறைவு. அந்த குறையை போக்க வந்திருக்கும் படம். 1600 காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் அஸ்தினாபுரம் என்ற மலைகிராமத்தில், மக்களிடையே கிறிஸ்தவ மதத்தையும், அது சார்ந்த சாத்தானின் நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். மக்கள் கிறிஸ்வதத்தை விட்டுவிட்டு சாத்தான் வழிபாட்டை பிடித்துக் கொள்கிறார்கள். இறந்தவர்களை உயிர்பிக்கும் சாத்தானின் புத்தகம் ஒன்றும் அஸ்தினாபுரம் மக்களிடம் இருக்கிறது.
இந்த புத்தகத்தை வைத்து இறந்த தன் கணவனை உயிர்பிக்க முயற்சிக்கிறார் சாந்தினி தமிழரசன், இந்த முயற்சியில் அவர் ஊர் மக்களால் கொல்லப்பட்டு விட தனது மகள் மோனா பெத்ரேவை வைத்து கிராம மக்களை பழிவாங்குகிறாள். பெத்ரேவின் மகள் ஆய்ராவையும் இந்த காரியத்தில் ஈடுபடுத்த துடிக்கிறார்கள். அது நடந்ததா? இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததா என்பததான் படத்தின் கதை.
தி நன், கான்ஜூரிங் பாணியிலா காட்சிகள் பயமுறுத்துகிறது. பாலாஜி ராமசாமியின் ஒளிப்பதிவும், அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசையும், பயம்கூட்டுகிறது. இன்ஸ்பெக்டராக நடித்துள்ள தயாரிப்பாளர் எட்வர்ட், நாயகி அய்ராவின் தாயாக வரும் ஸ்ரீஜாரவி, ஆகியோரும் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் பேயம் பயம் காட்டியிருக்கும்.