பீப்: ரத்தம், சத்தம் இல்லாத கிரைம் திரில்லர்

படத்தின் நாயகன் ராகவிற்கு ஒரு சிறிய வித்தியாசமான சூப்பர் பவர் இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு புகைப்படத்தை பார்த்து அந்த படத்திற்கு பின்னால் இருக்கும் கதையை சொல்லிவிடுவார். அதாவது புகைப்படத்தை ஊடுருவி பார்க்கும் திறன். இந்த திறனால் அவருக்கு ஒரு பெரிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

படிப்பு, நண்பர்களுடன் ஜாலி என போகிறது வாழ்க்கை. ஒரு நாள் அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள பாலியல் தொழிலாளி ஒருவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். செல்போனில் அடிக்கடி புகைப்படம் எடுக்கும் வழக்கம் உள்ள அவரின் செல்போன் படங்களை கொண்டு உண்மையில் என்ன நடந்ததது என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு நான்கு கிரைம் திரில்லர் படம் வந்தாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வந்திருக்கும் படம். அதீத வன்முறை, ரத்தம், சத்தம் எதுவும் என்று வெறும் காட்சி நகர்வுகளாலும், கதாபாத்திரங்கள் உணர்த்தும் உணர்வுளாலும் காட்சிக்காட்சி பரபரக்க வைக்கும் ஒரு படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் எல்.சண்முகசுந்தர். பிரசாந்த் விகாரியின் பின்னணி இசையும், பிரதீப் பத்மகுமாரின் ஒளிப்பதிவும் அவருக்கு நன்றாக இணை கரம் தந்திருக்கிறது.

படத்தின் நாயகிகன் யாமினி லட்சுமணன், பிரேமா கண்ணன், இதுல் ஆச்சார்யா, ஆகியோர் வெறும் கவர்ச்சி காட்டாமல் அவரவர் கேரடருக்குரிய முக்கியத்தும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் நிதிஷ், ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார்.
ஒருவரை நேரடியாக கொன்றால்தான் கொலை என்பதல்ல, ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருப்பதும் கொலைதான் என்பதை சொல்கிறது படம். அந்த கொலையை நோக்கி நகர்த்துகிற திரைக்கதை அபாராம். ஆர்ப்பாட்டமான படங்களுக்கு மத்தியில் வந்திருக்கும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.