பிளாக் கோல்டு: புதிய கதை, புதிய களம்
பொதுவாக தங்கம், வைரம், போதைப்பொருள் கடத்தல் இவற்றை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. ஆனால், மனிதர்களின் தலைமுடி ஏற்றுமதி வியாபாரம் மற்றும் அதன் பின்னணியில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வணிகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
நாயகனின் (வெற்றி) அப்பா பல வியாபாரங்கள் செய்து பார்த்து விட்டு கடைசியில் தலைமுடி வியாபாரத்தை கையில் எடுக்கிறார். பணம் கொட்டுகிறது. ஒரு நாள் ஒரு லாரி தலைமுடியுடன் அப்பா காணாமல் போகிறார். அப்பாவையும், லாரியையும் வெற்றி தேடும்போதுதான் தலைமுடி வியாபாரத்தில் உள்ள துரோகங்கள், போட்டிகள் தெரியவருகிறது. இதில் தாதாக்கள் மற்றும் காய்கறி வியாபாரம் செய்யும் கும்பல் என பலரும் உள்ளே வருகிறார்கள்.
நாயகன் வெற்றி, தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஆக்சன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அனுபவமிக்க நடிப்பால் லிவிங்ஸ்டன் வலுசேர்த்துள்ளார். அபிராமி வெங்கடாச்சலம் காவல் அதிகாரியாக கெத்து காட்டி நடித்துள்ளார். படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் தீரன் அருண்குமார்.
தலைமுடி வியாபாரத்திற்கு சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய மதிப்பு இருப்பதைக் காட்டிய விதமும், அதன் பின்னணியை விளக்கியதும், எளிதாகப் பணம் சம்பாதிக்க மற்றவரின் உயிரைத் துச்சமென நினைக்கும் மனிதர்களின் அவல நிலையை படம் சுட்டிய விதமும் படத்தின் தனிதன்மையாக இருக்கிறது.