பெண் இயக்குநர் படத்தில் 2 ஹீரோயின்கள்

சென்னையில் பல பள்ளிகளை நடத்தி வரும் கல்வியாளர் மலர்விழி நடேசன் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘சிக்னல் அட் 11.30’. ஒரு சாலை சிக்னலில் இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஒரு சம்பவத்தின் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை அமைத்துள்ளார்.

இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் மலர்விழி நடேசன் பேசியதாவது:

இது என்னுடைய இரண்டாவது படம். புஜிதா, பவ்யா. னுன இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதில் பாவ்யா சந்தோஷ் பிரதாப் ஜோடியாக நடித்துள்ளார். புஜிதா கதைக்கு தேவைப்படும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இருவரின் கேரக்டருக்கும் சம முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு கார் பயணத்தின்போது ஒரு சிக்னலில் சரியாக 11.30 மணிக்கு நான் பார்த்த ஒரு சம்பவத்தை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளேன். என்றார்.

நடிகை பவ்யா, ” எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மலர்விழி மேமுக்கு நன்றி. கடினமாக உழைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இமான் சாரின் இசை அற்புதம். ஜோ ஜோ பாடல் எனக்கு பர்சனலாக கனெக்ட் ஆனது. இது வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் “.

நடிகை புஜிதா, ” சிக்னல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். எனக்கு வாய்ப்பு கொடுத்த மலர் மேமுக்கு நன்றி. மிகவும் திறமையான, பாசிட்டிவான கோ-ஸ்டார் சந்தோஷ். பவ்யாவுடன் காம்பினேஷன் இல்லை. ஆனால், அவரை எனக்கு முன்பே தெரியும். இமான் சாரின் இசை மேஜிக். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

Leave A Reply

Your email address will not be published.