சீன்: பட்டாசின் நெருப்பும், மத்தாப்பின் வண்ணமும் கலந்த வித்தியாச தீபாவளி விருந்து

‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ படங்களைத் தொடர்ந்து ஜித்து மாதவன் தலைமையிலான மலையாள டீம் சூர்யாவை வித்தியாசமாக காட்டி பரபர காமெடி படத்தை தந்திருக்கிறது. பார்வை குறைபாடு உள்ள போலீஸ் அதிகாரி சூர்யா, கொலைகளை திட்டமிட்டு செய்து முடித்து சிரித்து மகிழும் நஸ்லென் ஆகியோருக்கு இடையிலான ஆடுபுலி ஆட்டம்தான் இந்த சீன்.
தனித்துவமான கதாபாத்திரங்கள், டார்க் ஹ்யூமர், எதிர்பாராத திருப்பங்கள், நேர்த்தியான காட்சியமைப்பு என தனது டிரேட்மார்க் அம்சங்களால் கட்டிப்போடுகிறார் ஜித்து மாதவன்.

தனது ஹீரோ இமேஜ் பற்றி கவலைப்படாமல் கதைக்காக கீழே இறங்கி வந்து அடிக்கிறார் சூர்யா. பார்வை குறைவும், விசித்திர குணங்களும் கொண்ட இன்பராஜாக சூர்யாவுக்கு நல்ல நடிப்புத் தீனி. உடல்மொழி, முகபாவனைகள், சிடு சிடு வசனங்கள் எனக் கதாபாத்திரத்துக்குத் தனி கலர் சேர்க்கிறார். குறிப்பாக, இன்பராஜின் பலவீனங்களை எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

பதற்றத்தின் சுவடே இல்லாமல் கூலாகக் கொலைகளைச் செய்யும் ஈஸ்வரனாக நஸ்லென் கச்சிதம். கொலைகளுக்கு பிறகு அவர் சின்ன பையன் போல சிரித்து மகிழ்வது இன்னும் சிறப்பு. மலையாளத்திலிருந்து ஒரு நல்வரவு. 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்குத் திரும்பியிருக்கும் நஸ்ரியாவின் துள்ளலும் எனர்ஜியும் துளியும் குறையவில்லை. மாயாவாக வசீகரிக்கும் அவருக்கும் சூர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி, படத்தின் இன்னொரு பலம். லால், ஆனந்தராஜ், மதியழகன், கஜராஜ், ராஜ்ப்ரியன் என நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாகவும், சீரியசாகவும் செய்திருக்கிறார்கள்.

வினீத் அகஸ்டியனின் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாமின் இசை. சீனுக்கு சீன் படத்தை ரசிக்க வைக்கிறது. ஒரு கொடூரமான சீரில் கில்லர் கதையை படு யதார்த்தமாக காமெடி கலந்து வித்தியாசமான விருந்து வைத்திருக்கிறது ஜித்த மாதவன்& சூர்யா கூட்டணி.

Leave A Reply

Your email address will not be published.