‘அப்பா குட்டி:யில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் விஜய் ஆண்டனி

‘நூறு சாமி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அப்பாகுட்டி’ திரைப்படம் வருகிற நவம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசியதாவது :

‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன.

‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் ‘அப்பா’ பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார்.

‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று நம்புகிறோம். இதனைத் தொடர்ந்து, ‘அயோத்தி’ பட இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படமும் தயாராகி வருகிறது.

இப்படத்தின் பணிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தத் திரைப்படம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். என்றார்.

=====

Leave A Reply

Your email address will not be published.