சினிமாவிற்காக ஒரு கிராமத்தையே உருவாக்கினோம்: ‘சிட்டுக்குறிஞ்சி’ தயாரிப்பாளர்

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரித்துள்ள படம் சிட்டுக்குறிஞ்சி. வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர். கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் ந 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், பேசுகையில், தனது கல்லூரி நாட்களில் ‘இளங்கதிர்’ கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி தன்னை இயக்குவதாகக் குறிப்பிட்டார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் பல்வேறு சவால்களும் போராட்டங்களும் நிறைந்ததாக இருந்ததாகத் தெரிவித்தார். படத்தின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பயணத்தை ஊடகங்களின் ஆதரவுடன்தான் கடக்க முடியும் என்றும் கூறி, அனைவரின் பேராதரவையும் கேட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் பேசுகையில், இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார். இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரத்தின் கதையும், பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்தையே உருவாக்கி படமாக்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.