கர்நாடக தமிழர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவான ‘பீட்சா பாய்ஸ்’

செவன் ஹில்ஸ் சினிகிரியேஷன் சார்பில் கே.என்.சங்கர், சஹானா சங்கர் தயாரித்துள்ள படம் ‘பீட்சா பாய்ஸ்’. சேகர் கேசப் ஸ்ரீன் இசை அமைத்து, இயக்கி உள்ளார். ஷிவம் சங்கர் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார், அலிபியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சரத், ஜமிம்கிலி, காக்கமுட்ட ரமேஷ், ஸ்லிம்ஷா சிவா, போலீஸ் சோப்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது “தமிழ்நாட்டை சேர்ந்த சில இளைஞர்கள் பெங்களூருவில் சிறிய அளவில் ஒரு பீட்சா கடை தொடங்குகிறார்கள். இதற்கு இட்லி கடை நடத்தும் நாயகி உதவுகிறார். இவர்களின் பீட்சாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் தொழில்போட்டி காரணமாக அங்குள்ள சிலர் இவர்களுக்கு இடையூறு செய்கிறார். வேறு சில பெரிய பிரச்சினைகளும் அவர்களுக்கு வந்து சேர்கிறது. அந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள். அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

பெங்களூருவில் 40 சதவிகித தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இதில் 10 சதவிகிதம்பேர்தான் நல்ல உத்தியோகம், நல்ல வியாபாரம் என நன்றாக இருக்கிறார்கள். மற்ற 30 சதவிதம்பேர் ஒரு போராட்டமான வாழ்க்கையைத்தான் எதிர்கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பின்னணியில்தான் இந்த படம் உருவாகி உள்ளது. காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாம் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.