மராட்டிய மொழியில் வெளியாகி பரவலான பாராட்டுகளை பெற்ற படம். 99வது ஆஸ்கர் விருது போட்டியில், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.
செல்போனும், மின்சாரமும் வராத காலத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் நடக்கிற கதை. அந்த கிராமத்தை சேர்ந்த அப்பாபி இளைஞனுக்கும் பக்கத்து ஊர் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. பெற்றோர் வற்புறுத்தலுக்காக திருமணத்திற்கு உடன்படுகிறாள்.
இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பண்ணையார் மற்று அவரது மகனுக்கும் மணப்பெண் மீது ஒரு கண். இந்த நிலையில் அந்த பெண்ணின் காதலும், அவளை கடத்திச் செல்ல வந்திருக்கிறார். திருமணத்தின் இரவு சடங்குகள் நடக்கிறது. அந்த சடங்களுக்கு இடையே இந்த காதல், கல்யாண சமாச்சாரங்கள் எப்படி தீர்த்து வைக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. கிராமத்து பாரம்பரியம் கலந்த உளவியல் திரில்லரை சிறப்பாக உருவாக்கியுள்ளனர்
மஹாராஷ்டிர கிராமத்தில் நடக்கும் மராட்டிய பாரம்பரிய சடங்குகளை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தவாகர் . இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி, நிஷாத் போயர், அனுஜ் பிரபு, சுரேஷ் விஸ்வகர்மா ஆகியோருடன், மற்றவர்களும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்..
மின்சாரம் இல்லாத கிராமத்தில் வெறும் லாந்தர் லைட்டின் வெளிச்சத்திலேயே படத்தை வண்ணமாக வரைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சவுத்ரி. தொடக்கத்தில் 25 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி அபாரம். மராட்டிய நாட்டுப்புற பாடல்களுடனும், சடங்குகளுடனும் இணைந்த இளையராஜாவின் பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. முன்னிரவில் தொடங்கிய கதை விடியும் வரை நடப்பது யதார்த்தமாக இருக்கிறது.
ஆஸ்கருக்கு செல்ல அனைத்து தகுதியும் உள்ள படம். வென்று வர வாழ்த்துவோம்.