காதல் கதை சொல்லவா: எல்லோருடைய காதலையும் பேசும் படம்: நகுல்

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள படம் ‘காதல் கதை சொல்லவா’. ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு நடைபெற்றது. இயக்குநர்கள் கே எஸ் அதியமான், மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் நகுல் பேசியதாவது: இந்தப் படத்தின் தலைப்பை பார்க்கும் போதே எனக்கு பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதல் பற்றி ஏதாவது தத்துவார்த்தமாகப் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது.
அதை நினைத்துப் பார்க்கும்போது எனது லவ் அதிகமாகிறது. முதலில் அம்மா என்னை நேசித்தார்கள். என்னை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். அம்மாவின் நேசத்தை நினைத்துக் கொள்கிறேன்.என் உடலின் மீது ஒரு காதல் வந்தது அதற்குப் பிறகு உடற்கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன்.அதேபோல் எனது திருமணம் குழந்தை என்று காதலுக்கு அர்த்தம் வந்தது.காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படையான ஒன்று.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நான் மாசிலாமணி படத்தில் பேச வேண்டிய ஒரு வசனம் இருக்கும். “எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும்” அதுதான் எனது வாழ்க்கையில நடக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.இங்கே எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. இந்தக் கதையை அனைவரும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம். அருமையான இந்த படக் குழுவிற்கு நன்றி. 15 நாள் தான் இதில் பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவம் வித்தியாசமான அனுபவம் .என்றார்.

Leave A Reply

Your email address will not be published.