பேமிலி கிரைம் திரில்லர்: புதிய பாணியில் உருவான ‘பரிமளா அண்ட் கோ’

பாண்டிராஜ் இயக்கி உள்ள படம் ‘பரிமளா அண்ட் கோ, ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், சாண்டி, பூர்னிமா ரவி, திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 20 வருடங்களுக்கு பிறகு ஜெயராமும், ஊர்வசியும் இணைந்து நடிக்கிறார்கள். லைகா தமிழ் குமரனுடன் இணைந்து பாண்டிராஜ் தயாரித்துள்ளார்.

படம் பற்றி பாண்டிராஜ் கூறியிருப்பதாவது: ஜெயராம், ஊர்வசி தம்பதிகளுக்கு ‘லப்பர் பந்தி’ல் நடித்த சஞ்சனாவும் அனந்திகாவும் மகள்கள். அன்பும், சண்டையும் மிக்க இந்த குடும்பத்திற்குள் ஒரு கொலை நடந்து விடுகிறது. இந்தக் கொலையை யார் செய்தது என்று குடும்பத்துக்குள்ளேயே சந்தேகம் வருகிறது. இந்த நால்வரில் யார் இந்தக் கொலையைச் செய்தது. அல்லது பெண்களின் ஆண் நண்பர்கள் செய்தார்களா இதுதான் கதை.

கொலையை கண்டுபிடிக்கும் போலீசாக மிஷ்கின் வருகிறார். யோகி பாபு வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கிறார். ‘கதகளி’ படத்திற்கு பிறகு டார்க் காமெடியில் சொல்லியிருக்கிறேன். படம் சீரியஸாகப் போய்க்கொண்டு இருக்கும்போது இன்னொரு பக்கம் ஆடியன்ஸ் சிரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு த்ரில்லர் படத்தை வைத்துக்கொண்டு சிரிக்க வைப்பது பெரிய சவால். படத்தில் வருகிற 18 கேரக்டர்களுமே முக்கியமான கேரக்டர்கள்தான். என்கிறார் பாண்டிராஜ்.

Leave A Reply

Your email address will not be published.