எக்ஸாம்: துணிச்சலான முயற்சி

புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்தில் வெளியாகி உள்ள வெப் தொடர் ‘எக்ஸாம்’. துஷாரா விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் நடித்திருக்கிறார்கள். நடுத்தரவர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவுதான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை ஒரு திரில்லர் மோடில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ள வெப் தொடர் தான் இந்த ‘எக்ஸாம்’.

சற்குணத்தை பொறுத்தவரை அவரது கதைக்களம் ரொம்பவே எதார்த்தமாகத்தான் பெரும்பாலும் அமையும். அதன் காரணமாகத்தான் அவரது படைப்புக்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். க்ரூப் 1, க்ரூப் 2 ஆகிய அரசு தேர்வுகளில் நடக்கும் மோசடியை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகவும், விட்டுக்கொடுக்காமலும் பேசியிருக்கிறார். குறுக்கு வழியில் தேர்வில் வென்று உயர்ந்த அரசு பணியில் ஒருவர் சேர்வதால்; நேர்மையாக அதை அணுகியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறார்; இன்னொருவர் அதே குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து அதிகாரத்துக்குள் செல்கிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

துஷாரா விஜயன். காவல் துறை அதிகாரியாக மிடுக்கோடு வரும் அவர், தனது பதற்றமான பாடி லாங்குவேஜால் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் அதிதி பாலன் துஷாராவோடு சேர்ந்து செய்யும் ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. துஷாரா விஜயனை வழிநடத்தும் அப்பாஸ் தன் பங்குக்கு சூப்பர் நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். சாம். சிஎஸ்ஸின் இசை அவ்வப்போது திகிலூட்டுகின்றன. மலை பிரதேசத்தின் அழகை ஒளிப்பதிவாளர் ஜில் என்று நம் கண்களுக்குள் கடத்துகிறார். சாமானியர்கள் நம்பிக்கொண்டிருக்கும் அரசு தேர்வில் நடக்கும் முறைகேட்டை துணிச்சலாக பேசிய வகையில் முக்கியத்தும் பெறுகிறது இந்த தொடர்.

Leave A Reply

Your email address will not be published.