சட்டென்று மாறுது வானிலை: திரில்லர் ரசிகர்களுக்கு பொருத்தமான வானிலை

அழகான காதலையும், அதிரடியான ஒரு கிரைம் திரில்லரையும இணைத்து தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாபு விஜய். கதையின் நாயகன் ஜெய், ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நாயகி மீனாட்சிட் கோவிந்தராஜனை கண்டவுடன் காதல். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு வில்லன் கருடன் ராம் நடத்தி வரும் ரெசாட்டி ல் தங்குகிறார்கள். சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். இந்த நிலையில் தான் ஹனிமூன் சென்றபோது ரிசார்ட்சில் தனியாக இருந்த வீடியோவை வில்லன் கருடன் ராம் கேமராவில் பதிவு செய்திருப்பது தெரிய வருகிறது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அவனிடம் இருக்கிறது. இது வெளிவந்தால் அத்தனை பேரின் வாழ்க்கை வீணாகும் என நினைக்கும் ஜென். தன் மனைவியுடன் இணைந்து இதற்கு ஒரு முடிவு கட்டுகிறார் அது எப்படி என்பதுதான் படத்தின் கதை.

ஜெய், காதல், நடனம், நடிப்பு, அழுகை , பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் எதார்த்ர் த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் மீது பாசம், தந்தை மீது வெறுப்பு, நண்பன் மீது கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வழ’கமான வில்லனாக கருடன் ராம். இவருக்கு இணையாக வில்லனிசம் செய்து இருக்கிறார் அஜய். யோகி பாபுவின் டபுள் மீனிங் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.

கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்துத் அம்சங்களையும் வைத்துத் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபு விஜய். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. திரில்லர் பட ரசிகர்களுக்கு பொருத்தமான வானிலை.

Leave A Reply

Your email address will not be published.