பூஜையுடன் தொடங்கிய வாலிபால் சினிமா

சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட்’ தயாரிக்கும் படம் அட்டாக்கர். அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறர். தனுஷின் சகோதரி மகன் பாவிஷ், குஷ்புவின் மகள் அவந்திகா சுந்தர் நடிக்கிறார்கள். வாலிபால் எனப்படும் கைப்பந்து விளையாட்டின் கலாச்சாரம், ஆர்வம் மற்றும் உணர்வை கொண்டாடும் வகையிலான கால்பந்து விளையாட்டு சார்ந்த முழுநீளத் திரைப்படம்.

இப்படத்தில் பாவிஷ் ‘வீரன்’ என்ற வாலிபால் விளையாட்டு வீரராக நடிக்கிறார்; குஷ்பு சுந்தர் மற்றும் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா ‘ஃப்ரிடா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அஜிலால் ‘வாயா’ ஆகவும், கௌதம் ‘ஜனா’ ஆகவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர நிஜ வாலிபால் விளையாட்டு வீரர்களும் நடி’கிறார்கள். சாய் முனிஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.