‘டோரதி’ உணர்வுபூர்வமான கதை: கார்த்திக் சுப்புராஜ்

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் டோரதி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். வருகிற 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையொட்டி படத்தின் முன் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பேசியதாவது: எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான். சினிமா ரசனைக்கு பெயர் போன ஊர் அது. என்னுடைய படங்களிலேயே ‘இறைவி’ தான் மிகப்பிடித்தது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதற்கு காரணம் அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கதையும் கூட.

‘இறைவி’யை விட உணர்வுபூர்வமான கதை ‘டோரதி’. இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். டோரதி படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார்.

சனந்த் திறமையான நடிகர். ரிஷியை ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். சனந்தும் ரிஷியும் நிஜமாகவே நண்பர்கள் என்பதால் நன்றாகவே திரையில் வொர்க்கவுட் ஆனது. கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனே ஒத்துக்கொண்டார். அவரது திரையிருப்பு படத்திற்கு இன்னும் அதிக வேல்யூ கொடுத்தது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது என்னுடைய 10ஆவது படம். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.