லெனின் பாண்டியன்: பெரும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சிறு துறும்பு

பெயருக்கு ஏற்ற மாதிரியே படமும் வித்தியாசமானதுதான். இதுவரை யாராலும் சொல்லப்படாததும்கூட. நேர்மையான போலீஸ்காரரை உண்மையை மறைக்க போலீசே எண்கவுண்டர் செய்ததால் அதே இடத்தில் போலீஸ் வேலைகு வரும் தர்ஷன் கணேசனை ஏளனம் செய்கிறது போலீஸ், எடுபிடி வேலை செய்ய வைக்கிறது உயர் அதிகார வர்க்கம்.

மணல் கொள்ளையை எதிர்த்து குரல் கொடுக்கும் முதியவர் கங்கை அமரனை போட்டுத்தள்ள திட்டமிடுகிறது மணல் மாபியா. தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்கிறார், அவருக்கு தர்ஷனை பாதுகாப்பிற்காக நியமிக்கிறது நீதிமன்றம். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. பெரும் அதிகார கும்பலை சிறு துறும்பு எப்படி எதிர்கொள்கிறது என்பது திரைக்கதை.

முதியவர் கங்கை அமரன், அவரது மனைவி ரோஜா, தர்ஷன் கணேசன் இந்த மூவரும் படத்தை தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள். கங்கை அமரன் நடிப்பில் ஆங்காங்கே மிகை நடிப்பு வெளிப்பட்டாலும் நடிப்பிலும் தன் முத்திரை பதித்திருக்கிறார். ரோஜா அனுபவ நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் படத்திலேயே தர்ஷன் கணேசன், தாத்தா சிவாஜி கணேசன் பெயரை காப்பாற்றி இருக்கிறார்.

ஒரு வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்து அதை நேர்த்தியான திரைக்கதை மூலம் அழகாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் டி.டி.பாலச்சந்திரன். எட்வின் சகாயின் ஒளிப்பதிவும், இளைராஜாவின் பாடல்களும் படத்தை தாங்கி பிடிக்கிறது. தனது முந்தைய பின்னணி இசையைகூட சரியான இடத்தில் வைத்திருக்கிறார் இளையராஜா.
ஜார்ஜ் மரியானின் நீதிமன்ற காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கிறது. ஆடுகளம் நரேன், யுகேந்திரன் வழக்கமான வில்லன்கள், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் தங்கள் இருப்பை பதிவு செய்கிறார்கள்.

கிளைமாக்ஸ் யூகிக்க முடிவதுதான் படத்தின் ஒரே மைனஸ். அதை மட்டும் சரி செய்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.