அர்கா மீடியா ஒர்க்ஸ் – ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் சாரா சச்சிதேவ் நடித்துள்ளனர். வருகிற அ’டோபர் 2ம் தேதி வெளிவருகிறது.
இதன் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலி பேசியதாவது: ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார்… ‘நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால்.. அதுதான் மிகச் சிறந்த கட்டிடம்’ என்றார். இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.
இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்…. அது எனக்குப் பிடித்திருந்தால்… நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன். அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.
‘
ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை..’ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.
பஹத் பாசில் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஷி’, ‘ட்ரான்ஸ்’, என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.
மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல்… இசை இல்லாமல்… பார்க்கும் போது நான் அழுதேன். சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.
படத்தில் சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா. அந்த கதாபாத்திரத்தில் சாரா நடித்திருக்கிறார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். திரையில் சூரி என் பெஸ்ட் பிரண்ட் என்று சொன்னாலும்.. படப்பிடிப்பு தளங்களில் இருவரும் நடிக்கும்போது எதிரிகளாகவே இருந்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று போட்டி இருந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும்… ஒவ்வொரு உரையாடலுக்கும்… ஒவ்வொரு சிறு சிறு நடிப்பிற்கும்…. சூரிக்கு, திவ்யா சரியான போட்டியாளராக இருப்பார். இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
இந்த திரைப்படம் பேத்தி முதல் பாட்டி வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்குமானது. அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து. இந்தத் திரைப்படம் தரும் மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் அனுபவியுங்கள்.
இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும், தமிழில் பின்னணி குரல் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்ஹாசனுக்கும், மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த நடிகர் மோகன்லாலுக்கும் நன்றி,” என்றார்.