‘சரண்டர்’ அரசியல் கிரைம் கதை

‘பிக் பாஸ்’ தர்ஷன் நடிக்கும் புதிய படம் ‘சரண்டர்’பாடினி குமார் என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ளனர். விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ளார்.

அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது ‘‘இது தேர்தலை மையப்படுத்தும் கதை. தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக போலீஸ் நிலையத்தில் ஒரு விபரீதம் அரங்கேறுகிறது. அதேவேளை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி காணாமல் போகிறது.
இதில் ஓய்வுபெற இருக்கும் போலீஸ்காரர் லால் மீது பழி விழ, சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியில் இருக்கும் தர்ஷன் களத்தில் இறங்குகிறார். அவர் எதிர்கொள்ளும் திருப்பங்களே படத்தின் மீதி கதை.

நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதை கதைக்களமாக கொண்ட இப்படம் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும். இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை.
இதில்பணியாற்றியுள்ள கேமராமேன், எடிட்டர், இசை என எல்லோருமே எனது குரு அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக உழைத்துள்ளோம். படம் நேர்த்தியாக வந்துள்ளது’ என்றார்.

நடிகர் தர்ஷன் பேசியதாவது: இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. கௌதம் சாருக்கு நன்றி, அவர் எப்போதும் என்னை மிகப்பெரிய ஹீரோ போல தான் நடத்தினார். எனக்காக என்னுடன் எப்போதும் நிற்கிறார். தயாரிப்பாளர் குமார் சார் ஒரு கதையை நம்பி, புது டீமை நம்பி, இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார். அவருக்கு நன்றி. நாங்கள் ஷூட்டில் எவ்வளவு டிஸ்கஸ் செய்தாலும் ரேணுவிடமும் கேட்டுக்கொள்வோம் என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார். ஓகே என்று தான் சொல்வார்.

எனக்கு இப்போது புதிதாக கதை சொல்ல வந்தவர்கள் அவர் தான் என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள் நன்றி சார். என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி. மன்சூர் அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். என்னை மக்களிடம் சேர்த்த பத்திரிகை நண்பர்கள் இப்படத்தையும் சேர்த்து விடுங்கள் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.