உருட்டு உருட்டு: மதுவின் தீமை உணர்த்தும் காதல்

பள்ளி பருவத்தில் ஏற்பட்ட பகை வாலிபமாக காதலிக்கும் வரை தொடர்கிற கதை. நாயகன் கஜேஷுக்கும் அவரது நண்பனுக்கும் பகை, அவர் நாயகி ரித்விகாவை காதலிக்க, அதை பழி
சுமத்தி தடுத்து நிறுத்துகிறார் நண்பன். ரித்விகாவின் தந்தையும் மகளை காதலிக்கும் கஜேஷை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

கஜேஷ் நாகேஷ் மது பழக்கத்திற்கு அடிமையானவராக யதார்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார். ரித்விகா ஸ்ரேயா அறிமுக நாயகி போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக சிரிக்க வைத்திருக்கிறார். சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் என படத்தில் நடித்த அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். காதல், கவர்ச்சி, காமெடி, எதிர்பாராத முடிவு என பலவற்றையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.

Leave A Reply

Your email address will not be published.