அர்ஜுன் தாஸ்: மக்களின் கலைஞன்

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பாம்’. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார்.

தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை கொடூர வில்லன், ஸ்டைலிசான ஹீரோவாக நடித்து வந்த அர்ஜூன் தாஸ், இதில் தனது ஹீரோயிசம், ஸ்டைல் எல்லாவற்றையும் ஒரங்கட்டிவிட்டு யதார்த்தமான புதிய பரிமாணத்தில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‘மாஸ்டர், விக்ரம், ரசவாதி, அநீதி’ ஆகிய படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜீத்திற்கு வில்லனாக நடித்தார்.
எந்த பின்னணியும் இல்லாமல், கடின உழைப்பு தனித்தன்மையான தனது குரல் வளம் இவற்றால் முன்னுக்கு வந்தவர் அர்ஜுன் தாஸ்.

பெரிய நட்சத்திரங்களுடன் வில்லனாக நடித்தாலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் மற்ற படங்கள் மூலமும் கவனம் ஈர்த்தவர். ‘அந்தகாரம்’ என்ற சைக்காஜிக்கல் திரில்லர் படத்தில் வேறு விதமான பரிமாணத்தை வெளிப்படுத்தியவர்,

‘ரசவாதி’ படத்தில் அடக்கமான இளைஞராக நடித்து விருதுகளையும் குவித்தார். இப்போது வெளியாகி உள்ள ‘பாம்’ படம் அவரை இதுவரை இல்லாத ஒரு கேரக்டரில் முன்நிறுத்தி உள்ளது.
வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியான ஒரு கேரக்டரை எந்த ஹீரோவும் செய்யத் தயங்குவார்கள். ஆனால் கதையை முன்னால் நிறுத்தி தனது கேரக்டரை பின்னுக்கு நிறுத்திக் கொண்ட பெருந்தன்மை அர்ஜூன் ராசுடையது.

வெற்றிகனை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத குணம், ஒவ்வொரு படத்திலும் தன்னை வளர்த்துக் கொள்ளும் விதம் என எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக, மக்களின் கலைஞனாக வளர்ந்து வருகிறார் அர்ஜுன் தாஸ்.

Leave A Reply

Your email address will not be published.