மார்க்: கொடுக்கலாம் 75 மார்க்

பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் எஸ்.பி. சுதீப் . பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வில்லன்களுக்கு எமன். எதிரிகளை அழிப்பதே இவரது வாழ்க்கை நெறி. பதவி இழக்க இரண்டு இரவுகள், ஒரு பகலுக்கும் செய்து முடிக்க வேண்டிய 3 முக்கிய கடமைகள் மார்க்கின் முன்னால் நிற்கிறது. பயங்கர ஆபத்தில் இருக்கும் 18 குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் , தாயைக் கொன்று முதல்வராகத் துடிக்கும் ஆதி கேசவனின் சதியை அம்பலப்படுத்த வேண்டும், போதைப்பொருள் மாஃபியாவிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதனை அவர் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எப்படி முடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய வில்லன்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய போலீசார், ஒரே ஒரு மார்க். இந்த வட்டத்திற்குள் பயணிக்கும் கதை. சக்தி, யுக்தி மற்றும் மன உறுதியுடன் மார்க் இந்த சவால்களை எப்படி வெல்கிறார் என்பதே திரைக்கதை.
ஹீரோவின் ஒரே அடியில் ரத்தம் கக்கி, காற்றில் பறக்கும் வில்லன்கள், தரையில் குத்தினால் நிலமே பிளக்கும் ஹீரோயிசம் டான்சிங் ஸ்டைல் ஃபைட் இவற்றைக் கொண்டு ஆக்ஷன் அதிரடி விருந்து படைத்திருக்கிறார் விஜய் கார்த்திகேயன். சுதீப்பின் எனர்ஜி, வேகம், நடிப்பு ஒன்றுக்கொன்று படத்தை தாங்கிப் பிடிக்கிறது. யோகி பாபுவின் காமெடி ரிலாக்ஸ் டைம். ஆக்ஷன் ரசிகர்களுக்கு அட்டகாச விருந்து.

Leave A Reply

Your email address will not be published.