அனந்தா: பாபாவின் மகிமை

புட்டபர்த்தி சாய்பாபா இறைவனின் வடிவமாக வணங்கப்பட்டு வருகிறார். அவர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் பல மகிமைகளை ஏற்படுத்தி உள்ளார். அவர்களில் ஐந்து பேரின் வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

சில சிக்கல்களில் சிக்கும் வடநாட்டு தொழிலதிபர் ஜெகபதி பாபு . மனைவி ஸ்ரீரஞ்சனி ஏற்படுத்திய சோகத்தில் தவிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன். காலில் அடிபட்டு நடனமாட முடியாமல் தவிக்கும் நடனக்கலைஞர் அபிராமி வெங்கடாசலம், மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகனை காப்பாற்ற போராடும் சுகாசினி. அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கிய வெளிநாட்டு பக்தர். இந்த ஐந்து பேர் வாழ்க்கையிலும் ஸ்ரீசத்ய சாய்பாபா எப்படி தனது மகிமை நிகழ்த்தினார் என்பது தான் படத்தின் கதை.

ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம், தலைவாசல் விஜய், சுஹாசினி ஆகியோர், அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். நிழல்கள் ரவி, மோகன் ராமன் ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் இருப்பிடங்களை கண்முன் கொண்டு வந்துள்ளார், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய். தேவா இசையில் பாடல்களில் பக்தி மணம் கமழ்கிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.