‘மை லார்ட்’ எனக்கு வெற்றிப் படம்: தயாரிப்பாளர் அம்பேத்குமார்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்த ‘ மை லார்ட்’ கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.

இதில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது: இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற சசிகுமார் மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள்.

அதேபோல், இந்த படத்தின் இயக்குனர் ராஜுமுருகனுக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசினஅருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

.

.

Leave A Reply

Your email address will not be published.