LIK ஆப்புக்கு லைக், ஷேர் செய்யலாம்.

செல்போனே பயன்படுத்தாத ஹீரோவு க்கும் (பிரதீப் ரங்கநாதன்) செல்போனே கதியாக இரு’கும் நாயகி க் கும் (கிரித்தி ஷெட்டி) இடையே வரும் காதலும், அந்த காதலு க் கு எமனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘எல்ஐகே’ ஆப்பும். அதன்பிறகு நடக்கும் அக்கபோர்களும்தான் படத்தின் கதை.

2040ம் ஆண்டு நடக்கும் கதையில் அந்த ஆண்டிற்கே நம்மை அழைத்துச் சென்று கதை சொல்லியிரு க்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பெரிதும் உதவியிருக்கிறார். இசையால் காதல் வளர்க்கிறார் அனிருத். 2040ம் ஆண்டு சென்னை எப்படி இருக்கும் என்பதை சொல்ல பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், பசுமை உலகம், சமகால நிகழ்வுகள் அப்போது என்ன வடிவிலிருக்கிறது என்பன போன்ற விஷயங்களோடு சுவாரஸ்யமான திரைக்கதையில் படத்தை தந்திருக்கிறார்கள்.

மொபைலுக்கு அடிமைப்பட்டிருக்கும் பழக்கம், நம் நெருங்கிய உறவுகளையும் எப்படி மறக்கச் செய்கிறது, அது உண்டாக்கும் சிக்கல்கள், அவை ஏற்படுத்து உளவியல் ரீதியான பாதிப்புகள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிறது படம். சீமானின் பசுமை உலகம் பார்க்கவும், கேட்கவும் அழகாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை.

இரண்டாம் பாதியில், ‘எல்.ஐ.கே’ செயலிக்கு முடிவு கட்ட பிரதீப் தீட்டும் திட்டங்கள் சாதாரணமானதாக இருந்தாலும், அதனை ரெபரென்ஸ்கள், காமெடிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. தொழில்நுட்பம் தனக்குள் உள்ளிடப்படும் தரவுகளை வைத்தே முடிவுகளை எடுக்கிறது, அதற்கு நிஜமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்ற மெசேஜை சொன்ன விதமும், காதலை யாராலும் கணிக்க முடியாது என்ற உலக தத்துவத்தையும் சொல்கிறது படம்.

காதல், காமெடி, ஆக்ஷன் எனத் தன்னுடைய டிரேட்மார்க் டச் கொடுத்து மீண்டுமொரு சதம் அடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தி ஷெட்டி நடிப்பை விட அழகில் கவர்கிறார். பாசமும், லேசான கண்டிப்பும் கலந்த தந்தையாக, நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார் சீமான். பர்சனல் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், அதனால் காதலுக்காகக் கண்டுபிடிக்கும் செயலி, நியாயமற்ற முறையில் அதனைக் காப்பாற்ற நினைக்கும் முடிவு என வில்லத்தனமான மைதானத்தில் ரசிக்க வைக்கும்படி ஆடியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. யோகி பாபுவின் ‘கெட்டப்’ காமெடிகள் ஆங்காங்கே கலகலத்திருக்கின்றன.

இவர்களைத் தவிர கெளரி கிஷன், ஷாரா, ஆனந்த்ராஜ், மாளவிகா ஆகியோர் குறைவில்லாத நடிப்பை தந்திரு’கிறார்கள். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் எல்ஐகே ஆப்புக்கு தாளராகமாக போடலாம் ஒரு ‘லைக்’.

Leave A Reply

Your email address will not be published.