வைல்ட் தமிழ்நாடு: நம் மண் நம் பெருமை

பொதுவாக வெளிநாடுகளில்தான் வைல்ட் லைப் திரைப்படங்கள் வெளிவரும். தமிழில் வெளிவந்துள்ள முதல் படம் ‘வைல்ட் தமிழ்நாடு’ என்கிற ஆவணப் படம். வனவிலங்கு புகைப்பட கலைஞரும், திரைப்பட இயக்குநருமான கல்யாண் வர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனம், நேச்சர் இன் ஃபோகஸ் அமைப்புடன் இணைந்து சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாகத் தயாரித்துள்ளது. மேலும், இது தமிழ்நாடு வனத்துத் றையின் ஆதரவையும் பெற்றுள்ளது.

சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து திணைகளை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் சூழலமைப்புகளை இந்த ஆவணப்படம் மிகச் சிறப்பாக விவரிக்கிறது. தமிழின் ஆழமான வேர்களுடன் இணைத்திருக்கும் விதம் மிகவும் புத்திசாலித்தனமானது; இது படத்திற்கு ஒரு வலுவான கதைக்கள அமைப்பைத் தருகிறது.

இதன் ஒளிப்பதிவுதான் படத்தின் பலமே. இதுவரை கேமராவில் பதியப்படாத காட்சிகள் முதன் முறையாக வெளிப்படுகிறது. அரவிந்த் சாமியின் பின்னணி குரல் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. தகவல்களை கொட்டி பாடம் நடத்துவது போன்று இல்லாமல். ஒரு திரைப்படத்திற்கான அனுபவத்தை தருகிறது படம். பின்னணி இசை காட்சியின் அழகையும், அழுத்தத்தையும் ஆடியன்சு க்கு கடத்துகிறது.

ஒரு மிகப்பெரிய மலைச்சுற்றுலா அனுபவத்தை தரும் இந்த படத்தை அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டும். மக்களின் ஆதரவே இது போன்ற படங்களை முன்னெடுத்துச் செல்லும். இன்னும் பல படங்கள் உருவாக காரணமாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.