ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள அனிமேஷன் திரைப்படமான மஹாஅவதார் நரசிம்மா படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வண்ணம் வெளியாகி உள்ளது.
விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களில் ஒன்றா நரசிம்ம அவதாரத்தின் கதை இது. விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரஹலாதனை அழிக்க திட்டமிடுகிறார் அவரது தந்தை ஹிரணகஷ்யு. அவரை அழித்து பிரஹலாதனை விஷ்ணு எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
கண்கவர் காட்சிகள் மற்றும் அழகான கதைசொல்லல் ஆகியவற்றின் பயன்பாட்டுடன், பண்டைய கதையை உயிர்ப்பிக்கிறது இந்த படம். இது இந்திய அனிமேஷன் சினிமாவின் ஒரு முக்கிய சாதனையாகும்.
அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படம், இந்திய சினிமாவின் முக்கியமான படமாகி இருக்கிறது. அனிமேஷன் தொழில்நுட்பம் தெளிவாக கி+ தரத்தில் உள்ளது, இது பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுக்கிறது. சாம் சி.எஸ்சின் பின்னணியும் மிரட்டுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் காண வேண்டிய பிரமாண்ட படைப்பு.