சினிமாவை வாழ விடுங்கள்: தடை அதை உடை இயக்குனர் உருக்கம்.

காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ” தடை அதை உடை “. அங்காடித்தெரு படத்தின் மூலம் நடிகரான அங்காடித் தெரு மகேஷ், சமீபத்தில் வெளியான திருக்குறள் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல்முருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாக்கியம் கௌதமி, பிரபல மேடை நாடக நடிகர் .ராதாகிருஷ்ணன், மற்றும் இவர்களுடன் விளாங்குடி நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், காத்து கருப்பு கலை, சுபா, சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.

படம் தமிழ்நாடு முழுவதும் வருகிற 31 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் அறிவழகன் பேசியதாவது: இந்த விழாவில் எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். அவர்கள் உழைப்பை எவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா நடிகர்களுக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். என் அப்பா ஷீட்டிங்கில் இருந்தார். விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார்.

எடுப்பதே கஷ்டம் என்றால் 36 மணி நேரம் நடிப்பது எவ்வளவு கஷ்டம். அவர்களுக்கு நன்றிகள். எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களுன் தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

படம் 1 மணி நேரம் 53 நிமிடம் மட்டுமே. பரபரவென போகும், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரே ஒரு விசயம் சினிமாவை வாழ விடுங்கள். சினிமா பிஸினஸ் என்றால், ஒரு மாதம் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காவிட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப்படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும், அனைவரும் பாருங்கள் நன்றி என்றார்.

Leave A Reply

Your email address will not be published.