‘அதர்ஸ்’ படத்தில் புதுமுகத்திற்கு இரண்டு ஹீரோயின்

கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படம் “அதர்ஸ்” . ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வரும் நவம்பர் 7 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்தில் புதியமுகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷன் பேசும்போது “ அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார் — அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

நடிகர் ஆதித்யா மாதவன் பேசும்போது“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர்.

இயக்குநர் அபின் ஹரிஹரன் பேசும்போது “ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம் . அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.