ஆண்ட்ரியா ‘மாஸ்க்’ தயாரிப்பாளரானது எப்படி? வெற்றி மாறன் விளக்கம்

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் சார்பில் நடிகை ஆண்ட்ரியா, எஸ்.பி.சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ள படம் மாஸ்க். கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகி உள்ளது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 21ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட் ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது.

சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட் ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம்.

விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது.

விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது.

நடிகர்கள் எல்லோர் நடிப்பும் ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம்.

கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது. சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி.
ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள்.

எம் ஆர் ராதா சார் ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.