சதுரங்க வேட்டை, சூது கவ்வும் பட வரிசையில் மற்றுமொரு படம். கதையின் நாயகன் கார்த்தீஸ்வரன் நான்கு விதமான மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்.
பாலியல் ஆர்வத்தால் மொபைலில் சாட் செய்யும் இளைஞர்களை குறி வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் அடிக்கிறார். ஒரு நிதி நிறுவனம் தொடங்கி கவர்ச்சிகரமான வட்டி தருவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பெற்று கொண்டு ஒரு வருடத்தில் எஸ்கேப் ஆகி விடுகிறார். 250 ரூபாய்க்கு மொபைல்தருவதாக சொல்லி சில கோடிகளை அள்ளி விடுகிறார். ஒரு பெண்ணுக்கு வலிந்து உதவி அவர் பணத்தையே ஆட்டைய போடுகிறார். இவரை கண்பிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி ஸ்ரீநிதி வருகிறார், கண்டுபிடித்தாரா? இல்லையா என்பது கதை.
படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் கார்தீஸ்ஸ்வரன் ‘இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதை போல் சாதுவான தோற்றம், அப்பாவி முகம் என இருந்து கொண்டு செய்யும் மோசடிகள் அனைத்தும் வேறலெவல் என்று சொல்ல வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி போலீஸ் கெட்டப்பில் சரியாக பொருந்துகிறார்.
ஹீரோவின் மோசடி கும்பலை சேர்ந்த மிருதுளா, ஆதவன் குறைவைக்கவில்லை. பணத்தை பறிகொடுத்த ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் நிலையை அனுபவ நடிப்பு மூலம்தந்துள்ளார் லிவிங்ஸ்டன்.
ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், எல்லா காலத்திலும் ஏமாற்றுகிறவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். மக்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறது படம்.