1970களில் வைகை அணை கட்டுவதற்காக, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த சில கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த கிராம மக்களின் பின்னணியில் உருவாகி இருக்கும் பீரியட் பிலிம். வெளியேற்றப்பட் கிராம மக்களின் தலைவர் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர், அதே கிராமத்தில் தனித்து விடப்பட்ட கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) மாமனாகி ஆதரிக்கிறார்.
விவசாய நிலங்கள் அழிந்து விட்டதால் கஞ்சா கடத்த முடிவு செய்கிறார்கள். இதனால் பணத்தோடு பகையும் வந்து சேர்கிறது. அதன் பிறகு இருவரும் அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஆக்ஷன், காமெடி கலந்து தனது வழக்கமான பாணியில் படம் தந்திருக்கிறார் பொன்ராம்.
கோபம், கெத்தான உடல்மொழி என மதுரைக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் சரத்குமார். எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடங்களில் கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த். காவல் அதிகாரியாக பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. கல்கி ராஜா, முனீஷ்காந்த் காமெடி கலகலப்பூட்டுகிறது. குறிப்பா அந்த லாரி பயணம். யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் இனிமையாக ஒலிக்கிறது.