பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக 3வது முறையாக உலக மனிதர்களோடு போராடுகிற கதை. ஜேக் சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்தோடு வருகிறது ஒரு அவதார். மீண்டும் அவற்றை எல்லாம் சமாளித்து, தன் குடும்பத்தையும், தன் வீடாகக் கருதும் பண்டோராவையும் எப்படி சல்லி காப்பாற்றுகிறான் என்பதை பேசுகிறது இந்த படம்.
மிதக்கும் அடர்ந்த காடுகள் , கடல், எரிமலை என கதை களங்கள் அனைத்தும் உலக பிரமாண்டம். ஒட்டுமொத்தமாக, திரையுலகில் தொழிற்நுட்ப ரீதியாக புதிய உச்சத்தைத் தொட வைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.முதல் பாகம் அடர்காடு, இரண்டாம் பாகம் ஆழ்கடல் என வெவ்வேறு உலகங்களைக் கண்முன் கொண்டுவந்த இயக்குநர், இந்த மூன்றாம் பாகத்தில் அவற்றோடு, சிறிது எரிமலைசார் நிலத்தையும் சேர்த்து கலவையாகப் படைத்திருக்கிறார்.
சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ’அக் கதை, கர்னல் மைல்ஸ் – மகன் ஸ்பைடர் பாசக்கதை என கிளைக்கதைகள் சுவாரஸ்மூட்டுகிறது. கிளைமாக்ஸ் போர்க் காட்சிகள் கச்சிதமான மேக்கிங்கால் அட்டகாசமான உணர்வைத் தருகிறது.