கோதண்டம் அன்ட் கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு இயக்கியுள்ள படம் “பருத்தி”. இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 25ம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
இவ்விழாவினில் இயக்குநர் குரு பேசியதாவது: என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பை இப்படத்தில் பேசியுள்ளேன். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் விதையை விதைக்கக் கூடாது என பேசியுள்ளோம். என்றார்.
நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது: பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
விழாவில் நடிகர் குகன் சக்கரவர்த்தி , நடிகர் பிரஜின், எஸ்ஜிஆர் பிலிம் பேக்டரி ஶ்ரீதர் , நடிகர் உதயா , நடிகர் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜா இயக்குநர் திருமலை நடிகர் ரிஷி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.