ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற அடல்ட் காமெடி படங்கள் வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் இது. தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை ஜி.ராஜசேகர் இயக்கி உள்ளார்.
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நாயகன் த்ரிகுண், ஸ்ரீஜித்தா கோஷை காதலிக்கிறார். காதலியிடம் எதையும் மறைக்ககூடாது என்று நினைக்கும் அவர் முன்பு கசமுசா பண்ணிய இரண்டு ஆன்டிகள் பற்றி கூறுகிறார். ஒருவர் இனியா, மற்றொருவர் சுந்தரா டிராவல்ஸ் ராதா. சரிபோகட்டும் என்று அதை ஏற்றுக் கொள்ளும் ஸ்ரீஜித்தா அவரை பதிவு திருமணம் செய்த கையோடு தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. த்ரிகுண் முன்பு கசமுசா பண்ணிய ஆன்டிகளான இனியா ஸ்ரீத்தாவின் அக்கா, ராதா அம்மா. இந்த அதிர்ச்சிக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
‘ஏ’ சான்றிதழுடன் ‘இது அடல்ட் கண்ட்டன்ட் படம்’ என்ற முத்திரையோடு படம் வெளியாகி இருப்பதால் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டியதில்லை. இது ஒரு வகையான படம். அதற்கென ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கான படம் இது. டபுள் மீனிங் வசனத்தில்தான் ஆபாசம் இருக்கிறது. காட்சிகளில் இல்லை. இதனால் தாராளமாக பார்த்து ரசிக்கலாம்.
என்றாலும் பெண்களை பாலியல் சின்னங்களாக காட்டியிருப்பது உறுத்தல்தான். மொத்தத்தில் ஏ பட ரசிகர்களுக்கு இது ‘டிரிபிள் ஏக’ படம்.