இன்றைய காதலே தனி ரகம்தான். டக்கென வெட்டிக் கொள்வார்கள். டக்கென ஒட்டியும் கொள்வார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலா போராட்டம் பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் அதில் தனி ரகமாக வந்திருக்கும் படம். விஜய் ஆண்டனி இசை அமைத்து, தயாரித்திருப்பது கூடுதல் ஸ்பெஷல்.
நாயகன் அஜய் திஷானும், நாயகி தனுஷாவும் தீவிரமாக காதலிக்கிறார்கள். ஒரு கார் பயணத்தின்போது இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு அதுவே இவரும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அடித்துக் கொள்கிற அளவிற்கு முற்றிவிடுகிறது. அதுவே அவர்களின் பிரேக்அப்பிற்கும் காரணமாகி விடுகிறது. இவர்கள் அடித்துக் கொள்கிற வீடியோ வைரலாக, இவர்களுக்குள் இருக்கும் ஈகோ எட்டிப்பார்க்க அதுவே பிரிவுக்கு காரணமாகி விடுகிறது. அதன்பிறகு இருவரும் சேர்ந்தார்களா? நிரந்தரமாக பிரிந்தார்களா என்பதுதான் கதை.
சம்பாதிக்கும் இளைய சமூகத்தினரிடம் இருப்பது பக்காவான ஈகோ அது காதலையும் எப்படி கலைத்துப்போடுகிறது என்பதுதான் படத்தின் மைய கரு. அதிஷ் திஷானும், தனுஷாவும் நடிக்கவில்லை கேரக்டராகவே மாறி இருக்கிறார்கள். நல்ல கதைகளை தேர்வு செய்தால் நல்ல எதிர்காலமும் இருக்கிறது.
ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் கணேஷ் சந்திரா. இன்றைய தலைமுறையின் நாடிபிடித்து பார்த்து படத்தை தந்திருக்கிறார். இவருக்கும் இன்னொரு காதல் பூப்பதும், முந்தையை காதலில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், அழகாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.
விட்டுக்கொடுத்தல் ஒன்றே எல்லா காதல் காயங்களுக்கும் மருந்து என்று அடித்துச் சொல்கிறது படம்.
இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய படம்.