அப்பாவின் புன்னகையில் வெற்றியை பார்த்தேன்: சௌந்தர்யா நெகிழ்ச்சி

சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் , பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ்” படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது. ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.

படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.

அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்.

இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.