ஜே.பி.பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில்,ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”.
ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார். வரும் 20ம் தேதி வெளி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கதிரேசன் பேசியதாவது:
எனக்கு நெருக்கமான நண்பரும், குடும்ப உறுப்பினருக்குச் சமமானவருமான பாலகோபி அவர்களின் மகனின் அறிமுக விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. பல தயாரிப்பாளர்களுக்குப் பக்கபலமாக இருந்து, பல வெற்றிப் படங்களுக்குப் பின்னால் உழைத்தவர் அவர். அந்த வெற்றிகளில் ஒரு சிறிய பங்கு இருந்தாலும், அவருடன் இணைந்து பயணித்த அனுபவம் எனக்குப் பெருமை.
அந்த வெற்றிகளுக்காக அவருடைய மகனுக்கு நேரடியாக வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காத நிலையில், இன்று இந்த விழாவில் கலந்துகொண்டு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிப்படங்களை உருவாக்கியவர் மகனுக்கு வெற்றி தாருங்கள் என்பது எனது வேண்டுகோள்.
இங்கு குறிப்பாக சரண் அவர்கள் இப்படத்திற்குப் பாடல் எழுதியிருப்பது பெரும் மகிழ்ச்சி. அவருக்கு நான் ரசிகன், அவர் போன்ற ஆளுமை புதுமுகங்கள் பட்டதிற்குப் பாடல் எழுதுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள் தான் ஜெயிக்கிறது, அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.