ஆழி: கடலை விட ஆழமான காதல்

தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடுக்கடலில் படமா’கப்பட்டுள்ள ஒரு உணர்வு போராட்ட கதை. மகள் பாசமும், காதலும் மோதும் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது எது என்பதுதான் படம்.

படகு இன்ஜின் மெக்கானிக் மூர்த்தி (சரத்குமார்). கரைக்குத் தெரியாமல் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் ஒரு நிழல் உலக தாதா . இவருக்குத் தன் மகள் முகிலா (தேவிகா சதீஷ்) தான் உலகம். முகிலாவோ, வறுமையிலும் குடும்பத்துக்காக நேர்மையுடன் உழைக்கும் சக கல்லூரி மாணவன் அருளை (இந்திரஜித் ஜெகஜித்) காதலிக்கிறாள்.
இந்த காதல் பிடில்காத மூர்த்தி அருளை நடுக்கடலுக்கு கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொல்ல திட்டமிடுகிறார். சுறாவுக்கும், மீனுக்குமான போராட்டம் தொடங்கி எப்படி முடிகிறது என்பதுதான் திரைக்கதை.

படத்தை தாங்கி பிடிப்பது சரத்குமார். கட்டுமஸ்தான உடல் கட்டுக்குள் கசிந்துருகும் மகள் பாசத்தை பிரமாதமாக பிரதிபலிக்கிறார். படகிற்குள் அவர் காட்டும் அந்த அதிகாரம் கலந்த குரோதமும் புஜபலமும் நம்மை அவர் மீது கோபம் கலந்து பரிதாப்பட வைக்கிறது. அவர் தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தி வைத்திருக்கும் அந்தப் பெயர் அவர் மீது இரக்கம் கொள்ள வைக்கிறது.

அருள் ஆக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித் தமிழ், சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. ஓர் எளிய இளைஞனாக அறிமுகமாகி, உயிர் பிழைக்கப் போராடும் காட்சிகளில் நடிப்பும், கடுமையான ஆக்ஷன் காட்சிகளில் பட்டிருக்கும் அடிகளும் காட்சியில் அப்பட்டமாகத் தெரியும்போது, அவர் தனது கதாபாத்திரத்துக்காக எவ்வளவு வலியையும் தாங்கியிருக்கிறார் என்பதைக் காண முடிகிறது.

கடலை விட ஆழமானது காதல் என்பதை காட்சி மொழியில் அழகாக சொல்கிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.