ஆர்ப்பாட்டமான அடிதடி படங்களுக்கு மத்தியில் தெளிந்த நீரோடையாய் ஒரு படம் இது. தலைப்பை போலவே கவிதையாய் ஒரு கதை. தனித்து வாழும் படத்தின் நாயகன் அந்தோணிக்கு, விலைமாதுகள்தான் உற்ற துணை. அப்படி அவரிடம் வந்து சேர்கிறவர் மதுமிதா தாஸ். ஆனால் அவர்களுக்குள் காமம் தெறிக்காமல், காதல் பூக்கிறது.
தாங்கள் யார் என்பதை மறந்து இருவரும் தீவிரமாக காதலிக்கிறார்கள். ஒருவரின் பின்னணி மற்றவர்களுக்கு தெரியவரும்போது என்ன நடக்கிறது. அந்த காதல் நீடிக்கிறதா? வெறும் காமமாக கடந்து செல்கிறதா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
நடித்திருக்கும் டி.அந்தோணியே தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார். அவரது தோற்றமும் கேரக்டருக்கு பொருந்திப்போகிறது. மதுமிதா தாஸ் அழகாக இருக்கிறா£. அன்பாக பேசுகிறது படம் முழுக்க அவர் வந்தாலும் சலிக்கவே இல்லை. இவர்கள் தவிர ஜீவா ரவி, ரெஜினா ரோஸ், நவ்யா சுஜி ஆகியோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசை கடைசிவரை மென்மையாக ஒலிக்கிறது. இயல்பை மீறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பியட்ரோ வில்லானி. அவள் அப்படித்தான், சதுரங்கம் படம் பாணியில் தற்போது ஒரு படம்.