4 இடியட்: காமெடி கலாட்டா

புகழ் மற்றும் கும்கி அஸ்வின் தலைமையிலான 4 பேர் திருடர்கள். கொரோனா நேரத்தில் தவிகும் அவர்கள் ஒரு பெரிய திருட்டை நடத்தி விட்டு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதனால் ஒரு போன் தகவலை கொண்டு ஆள் இல்லாத ஒரு பங்களாவிற்குள் நுழைகிறார்கள்.

ஆனால் அந்த பங்களாவில் எல்லா கலைகளும் தெரிந்த பவர்புல்லான காவலாளி ரவிமரியா இருக்கிறார். அதோடு அந்த வீட்டிற்குள் இன்னொரு மர்மமும் இருக்கிறது. அது வில்லன் வின்செண்ட் அசோகனுடன் தொடர்புடையது.திருடச் சென்ற இடத்தில் வசமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்கிறது படம்.

புகழ் காமெடியாக நடித்து ஆச்சர்யமூட்டுகிறார். கும்கி அஸ்வின், இந்திரன் இளங்கோவன் மற்றும் திடியன் திருச்செல்வம் ஆகியோர் அவரது நண்பர்களாக கலகப்பூட்டுகிறார்கள். ரவி மரியா, தனது வழக்கமான ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் அந்தப் பாத்திரத்திற்குக் கொண்டுவந்து, பாதுகாவலர் பாத்திரத்தில் தனித்து நிற்கிறார். அதே சமயம், வின்சென்ட் அசோகன் வில்லன் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். நாயகி பிரக்யா நயன் பாத்திரத்திலும் ஒரு எதிர்பாராத திருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

கதையின் பெரும்பகுதி ஒரே வீட்டிற்குள் நடப்பதால், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் காட்சிகளை ஈர்க்கும் வகையில் வைத்திருக்கும் சவாலான பணியைச் செய்கிறார், சுபாஷ் முனிரத்தினத்தின் இசை போதுமான ஆதரவை வழங்குகிறது.

மொத்தத்தில், ஒரு நேர்மறையான செய்தியுடன் கூடிய முழுமையான நகைச்சுவைப் படத்தை தந்திரு’கிறார் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன்.

Leave A Reply

Your email address will not be published.