பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் புதிய படம் நேற்று அவரது பிறந்த நாளையொட்டி பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன், மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு “காட்ஸ் ஜில்லா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பூஜையில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி ஷி. தாணு , திணிதிஷிமி தலைவர் ஸி.ரி. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் தர்ஷனுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கிறார். அலிஷா மிரானி நாயகியாக நடிக்கிறார். ரோபோ சங்கர், வினோத், பிளாக் பாண்டி நடிக்கிறார்கள். கார்த்திக் ஹர்ஷா இசை அமைக்கிறார், சிவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
மோகன் குரு செல்வா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும். காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு. என்றார்.