லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் சார்பில் சாய் தேவானந்த், சாய் வெங்கடேஸ்வரன், நீலம்ட புரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தண்டகாரண்யம்’. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கி உள்ளார்.
தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு நடித்துள்ளனர். வருகிற 19ம் தேதி படம் வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் அறிமுகவிழா நடந்தது.
நிகழ்வில் படத்தின் இயக்குனர் அதியன் பேசியதாவது: படத்தின் கதையானது மகாபாரதம் பல ஆண்டுகால இருக்கிறது. அது தெரு கூத்து, நாடகம் என பல வடிவில் வந்து இருக்கின்றது. இருப்பினும் அனைத்திலும் கிருஷ்ணர் ஏன் தாமதமாக வந்தார், அதேபோல கிருஷ்ணர் சீக்கிரம் வா என திரௌபதி குரல் எழுப்புவது போல தான் இருக்கும்.
ஆனால் மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில் உறியும் பொழுது சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பி இருந்தது. அதை கருப்பொருளாக வைத்துக் கொண்டு என்னுடைய இந்த படம் அமைந்திருக்கிறது.
படத்தில் முதலாவதாக இயக்குனர் அமீர் நடிக்க இருந்தார் இருப்பினும் திடீரென அவர் நடிக்க முடியாததால் அந்த கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்பு கொண்டார். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய இந்தத் திரைப்படம் குரல் எழுப்பும் என்ன நான் நம்புகிறேன். படத்தில் ஒரு பாடகர் அறிவு பாடி இருக்கிறார். என்றார்.
இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்தப் படத்தில் என்னுடன் சேர்ந்த தயாரித்த தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் திரைப்படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை. சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்கின்ற முனைப்போடு வந்திருக்கிறோம்.
நான் இயக்குனராக வரும்போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர். முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள் இருப்பினும் தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக நீலம் ப்ரொடக்ஷனில் வேட்டுவம், பைசன் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. என்றார்.