வில்: கசப்பான சமூக உண்மைகள்

தந்தையின் மானத்தை காப்பாற்ற தன் மானத்தை விட்டுக் கொடுக்கும் ஒரு மகளின் கதை. கதையின் நாயகி அலக்கியாவும், அவரது தம்பியும் படிப்பில் ஆர்வம் மிக்கவர்கள். அவர்களின் படிப்புக்காக தந்தை ஒருவரிடம் 7 லட்சம் கடன் வாங்குகிறார். அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.

தன் தந்தை அவமானப்படக் கூடாது என்பதற்காக பணத்தை எப்படியாவது திருப்பி கொடுக்க முடிவு செய்யும் அலக்கியா, ஒரு பணக்கார முதியவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். அவர் மூலம் கடன்களை அடைக்கிறார். அந்த பணக்கார முதியவர் திடீரென இறந்து விடுகிறார். அங்கு சொத்து பிரச்சினை வருகிறது. அப்போது முதியவர் மதிப்பு மிக்க சென்னை வீட்டை அலக்கியா பேருக்கு எழுதி வைத்துள்ளார்.

பிரச்சினை கோர்ட்டுக்கு செல்கிறது. போலீஸ் அதிகாரி விக்ராந்தும், நீதிபதி சோனியா அகர்வாலும் இதனை எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
அலக்கியா இயல்பாக நடித்துள்ளார், விக்ராந்திற்கு பெரிதாக வேலை இல்லை. சோனியா அகர்வால் அழகான நீதிபதியாக வருகிறார், தவறான வழியில் பிறக்கும் பல லட்சம் குழந்தைகள் ஒரு பக்கம், ஒரே ஒரு குழந்தைக்காக ஏங்கும் பெற்றோர்கள் மறுபக்கம் என இருதரப்பு விஷயங்களையும் நடுநிலையோடு நின்று பேசி இருக்கிறார் இயக்குனர் எஸ்.சிவராமன்.

Leave A Reply

Your email address will not be published.