கோவை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் ரஞ்சித் இவரது மனைவி மொகாலி மீனாட்சி இவர்களுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். இவர்களின் மகனுக்கு இருதயத்தில் உள்ள பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது.
ராஜப்பா என்ற வட்டி தொழில் செய்யும் தாதாவிடம் 80 லட்சம் வரை கடன் வாங்குகிறார் ரஞ்சித். இது வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியை தாண்டுகிறது. ராஜாப்பா சொன்ன நேரத்தில் பணத்தை ரவியால் தர முடியாததால் ராஜாப்பா பல வழிகளில் மிரட்டுகிறார்கள். வேறு வழியில்லாமல் ரஞ்சித் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இந்த தற்கொலை முயற்சி என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.
கந்து வட்டி கொடுமையின் கோர முகத்தை படம் பதிவு செய்கிறது. ஒரே வீட்டில் கதை நகர்ந்தாலும் கந்து வட்டியின் கோரமுகத்தை உணர வைத்து விடுகிறார் டைரக்டர் வெங்கட் ஜானி. உணவில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கு தரும் காட்சியில் கண் கலங்கி விடுகிறது.
ஒரு அம்மாவாக குழந்தைகளுக்கு விஷம் தர தவிக்கும் போதும், ரவுடிகளால் அவமானப்படுத்தப்படும் போதும் மெகாலி மீனாட்சி சிறப்பாக நடித்திருக்கிறார். இது வரை பல படங்களில் முரட்டுத்தனமான வில்லானாக நடித்த ரஞ்சித் இப்படத்தில் கடன் வாங்கி தவிக்கும் ஒரு குடும்ப தலைவனாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
கந்து வட்டி பிரச்சனையை ஒரு சராசரி குடும்ப பின்னணியில் சொன்னதற்கு இறுதி முயற்சியை பாராட்ட வேண்டும்.
கடன் இல்லா வாழ்வே பெரு வாழ்வு என்கிறது படம்.