‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’. இந்த மூன்றும் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத அடையாளமாகி விட்டது-. அந்த வரிசையில் வந்திருக்கிறது காந்தாரா&2 .முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் மறையும் இடத்திலிருந்து தொடங்கும் கதை, அதற்கு காரணத்தை ஒரு புராணக் கதையின் வழியே சொல்கிறது. காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது. இதில் மன்னனின் மகன் விஜயேந்திரன் (ஜெயராம்) மட்டும் தப்பிவிடுகிறார்.
பல ஆண்டுகள் கழித்து மன்னாக இருக்கும் விஜயேந்திரன் தனக்குப் பிறகு தனது மகன் குலசேகரனுக்கு (குல்ஷன் தேவய்யா) முடி சூடுகிறார். மீண்டும் காந்தாரா காட்டுக்குள் நுழையும் குலசேகரனால், காட்டைக் காக்கும் பழங்குடி மக்களுக்கும், குலசேகரன் படைகளுக்கு மோதல் ஏற்படுகிறது. காந்தாரா மக்களின் தலைவனாக இருக்கும் நாயகன் (ரிஷப் ஷெட்டி) எடுக்கும் முடிவுகள் என்ன? குலசேகரனின் தங்கை கனகவதிக்கும் நாயகனுக்குமான உறவு என்ன? இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் கதை.
தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் துல்லியமும், உழைப்பும் அப்பட்டமாக தெரிகின்றன. அந்த வகையில் சந்தேகமே இல்லாமல் இந்த படம் ஒரு ‘டெக்னிக்கல் மாஸ்டர்பீஸ்’.காடும் காடு சார்ந்த காட்சிகளின் மேக்கிங்கும். பிரமிக்க வைக்கிறது.முந்தைய பாகத்தை காட்டிலும் அசாத்திய உழைப்பை கொட்டியிருக்கிறார் ரிஷப் ரெட்டி.ருக்மிணி வசந்துக்கு கனமான கதாபாத்திரம். அதற்கு தனது சிறப்பான நடிப்பால் நியாயம் செய்கிறார். அரசனாக வரும் குல்ஷன் தேவய்யா வரும் காட்சிகளில் மிரட்டல்.
மொத்தத்தில் மீண்டும் ஒரு பேண்டசி பிரமாண்டம்.