அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரித்துள்ள படம் ‘மருதம்’. வி.கஜேந்திரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கதையின் நாயகனாக விதார்த்தும், நாயகியாக தர்ஷனாவும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் நாயகி ரக்ஷனா பேசியதாவது: மருதம் என் இரண்டாவது படம், கடவுளுக்கு நன்றி. இரண்டாவது படத்தில் பெரிய ஹீரோ கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை, விதார்த்துடன் நடித்தது இனிய அனுபவம்.
ஒரு சின்ன கிராமத்தை மிக அழகாகக் காட்டியுள்ளனர். மிகுந்த வெயிலில் படம் எடுத்தோம் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. குழந்தைக்கு எப்படி அம்மாவாக நடித்தீர்கள் எனக்கேட்கிறார்கள். ஏன் ஒரு நடிகை அம்மாவாக நடிக்க கூடாதா இந்ழீ ஸ்ட்ரீயோடைப் கேள்விகளை உடைக்க வேண்டும் என நினைத்தேன், அம்மாவின் உலகத்தை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன் அது இந்தப்படத்தில் நடந்தது. மருதம் மிக அற்புதமாக வந்துள்ளது. என்றார்.
இயக்குநர் கஜேந்திரன் பேசியதாவது: அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வாய்ப்பு வாங்கி தந்த கேபி பாலசந்தர் சாருக்கு இன்று நன்றி கூறிக்கொள்கிறேன். சிட்டிசன் படத்தில் எனக்கு உதவி இயக்குநராக வாய்ப்பளித்த சரவணன் சுப்பையா சாருக்கு என் நன்றிகள். நான் கதையில் யோசித்த நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு அற்புதமாக நடித்துத் தந்த விதார்த் அவர்களுக்கு நன்றி. ரக்ஷனா நான் இந்த ரோலில் நடிக்க மாட்டார் என நினைத்தேன் ஆனால் கதையைப் புரிந்து கொண்டு நடித்துத் தந்ததற்கு நன்றி.
நடிகர் விதார்த் பேசியதாவது: இந்தப்படத்தில் நடிக்க நான் முதல் காரணம் அன்பழகன் அண்ணன். அவர் தான் கஜேந்திரன் சாரை அறிமுகப்படுத்தினார். கதை சொன்ன போது இது உங்களுக்கு நடந்ததா எனக்கேட்டேன் என் நண்பருக்கு நடந்தது என்றார். ஷீட்டிங்கில் அவரைச் சந்தித்தேன். இது இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடக்கிறது. இந்த விசயத்தை நீங்கள் கண்டிப்பாக நேரில் பார்த்திருப்பீர்கள். இந்தப்படத்தில் நடித்தது மிகுந்த சந்தோசம். என்றார்.