ஹீரோவான டீக்கடைகாரர் மகன்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குமார சம்பவம்’ .
நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார். வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் ஒலி வடிவமைப்பாளர் சரவணன், ‘சரிகம’ ஆனந்த், படத்தொகுப்பாளர் மதன், கலை இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகர்கள் வினோத் முன்னா, குமரவேல், சிவா அரவிந்த், நடிகைகள் தாரிணி, கவிதா, நாயகன் குமரன் தங்கராஜன், நாயகி பாயல் ராதாகிருஷ்ணா, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தயாரிப்பாளர் கே. ஜி. கணேஷ், தயாரிப்பு நிர்வாகிகள் சீனிவாசன், ரவிக்குமார் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாயகன் குமரன் தங்கராஜன் பேசுகையில், ” கிட்டத்தட்ட 17 ஆண்டு கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார்.

என்னுடைய குடும்பத்தினருக்கு திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர். அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

Leave A Reply

Your email address will not be published.